பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்பரிஷி மலையில், உலக நன்மை வேண்டி, 108 கோ பூஜை துவங்கியது. பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் தொடர்ந்து, 51 நாட்கள் நடக்கும் கோ பூஜை, நேற்று காலை, 5.30 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சிக்கு, மகா சித்தர்கள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் குருஜி தலைமை வகித்தார். தொடர்ந்து, மூன்று நாட்கள் மண்டோதரி பூஜை நடக்கிறது. பின்னர், 210 சித்தர்கள் யாகம், சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம், காசு தானம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் சேர்ந்த மெய்யன்பர்கள் வக்கீல் ரத்தினவேல், நடராஜபாபா, குஜராத் ஹரிஷாபட்டேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.