விருத்தாசலம்: ஆற்றங்கரை சித்தி விநாயகர் சுவாமி, சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருத்தாசலம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில் சதுர்த்திப் பெருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் 7ம் நாள் உற்சவத்தையொட்டி, மாலை 6:30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.