பதிவு செய்த நாள்
16
செப்
2015
11:09
பொள்ளாச்சி :பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பொள்ளாச்சி கடைவீதி பால கணேசர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழாவையொட்டி நாளை காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாக வாசனம், நவகவ்ய பூஜை, பூர்வாங்க பூஜை, ஜபம், ேஹாமம், பாராயணம், விசேஷ திரவ்யாகுதி, கலச அபிேஷகமும்; காலை 11:00 மணிக்கு சோடஷ மகாபிேஷகம், கலச அபிேஷகம், பொது அர்ச்சனையும் நடக்கிறது. பின், மாணவர்களுக்கு படிப்பு உபகரணங்கள் வழங்கி வாழ்த்துதல், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, பால கணேசர் பக்த சபா சார்பில், சுக கானாமிர்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி பணிக்கம்பட்டி கற்பக விநாயகர் கோவில் நான்காம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நாளை காலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை மகா புண்ணியஸ்தலம், திருக்கைலாயம், அமிர்நாத் தீர்த்தம், மகா புண்ணியஸ்தலம், தெய்வகுல காளியம்மன் கோவில் தீர்த்தம், மகா அபிேஷகமும்; காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை அருட்பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு ராஜ அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பொள்ளாச்சி விநாயகர் கலை மன்றம் சார்பில், 55வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி விழா பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில் பூஜை, அர்ச்சனை, ஆராதனைகள், அன்னதானம் நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு விநாயகர் பெருமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.