காரைக்கால் மாவட்டத்தில் 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 11:09
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கப்படும் வழக்கம். இதைபோல் இந்தாண்டு விழா சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு வருகிறது. காரைக்கால் காளியம்மன் கோயில் தெரு சித்தி விநாயகர்,வலத்தெரு பாலவீரவிநாயகர், வேட்டைக்காரன் தெரு சக்திவிநாயகர் மற்றும் வெற்றி விநாயகர் உள்ளிட்ட 45 இடங்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.வரும் 19ம் தேதி விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர் விழா குழு,மத்திய கமிட்டி மற்றும் இந்து முன்னணி சிறப்பாக செய்து வருகின்றனர்.