குணசீலம் நம்பெருமாள் கோயிலில் சிம்ம வாகனத்தில் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 12:09
திருச்சி: குணசீல மகரிஷியின் தவத்திற்காக பிரஸன்ன வேங்கடாசலபதி காட்சியளித்த தலமாக திருச்சி குணசீலம் நம்பெருமாள் கோயில் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் விரதமுறைப்படி கடைபிடித்து குணசீலம் நம்பெருமாளை வணங்கினால் குணமடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலின் ப்ரமோத்சவ திருவிழாவானது கடந்த 15ம் தேதி தொடங்கியது. முதல் திருநாளான நேற்று நம்பெருமாள் அன்னவாகனத்தில் வீதி உலா வந்தார். இரண்டாம் திருநாளான இன்று காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். தொடர்ந்து நாளை முதல் ஹனுமந்தம், தங்க கருடன், சேஷம், யானை, குதிரை ஆகிய வாகனங்களில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வீதி உலா வருவார். 22 ம் தேதி அன்று நம்பெருமாள் உபநயாநச்சியாருடன் மண்டபத்தில் எழுந்தருள்வார் அப்போது அங்கு திருக்கல்யாண உச்சவம் நடைபெறும். முக்கிய திருநாளான 9 ம் திருநாள் அன்று உபய நாச்சியாருடன் நம்பெருமாள் எழுந்தருள தேர்திருவிழா நடைபெறும்.