தாண்டிக்குடி: தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயில் சதூர்த்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. 35 அடி உயர மரத்தில் எண்ணெய், முட்டை, கடுகு, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு மரத்திற்கு வழவழப்பை ஏற்படுத்தி இருந்தனர். வீர விளையாட்டில் ஒன்றாகவும், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஒற்றுமையை பிரதிபலிக்கும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்த இளைஞர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக நிகழ்ந்த இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.