கம்மாபுரம் சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2015 12:09
கம்மாபுரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, கம்மாபுரம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கம்மாபுரம் மேட்டுத்தெரு சித்தி விநாயகர் கோவிலில் 18.9.15-அன்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 3:00 மணியளவில் ராஜ கணபதி அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
அதேபோல், கம்மாபுரம் மருத்துவ விநாயகர், காவல் விநாயகர், பெரிய கோட்டுமுளை ராஜ கணபதி, சிறுவரப்பூர் கணபதி, விளக்கப்பாடி செல்வ விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கம்மாபுரம் ஒன்றியத்தில், 35 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.