விவசாயத்தை பிரதான படுத்தி விநயாகர் சிலை பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2015 12:09
கச்சிராயபாளையம்,: கச்சிராயபாளையத்தில் விவசாயத்தை பிரதான படுத்தி விநாயகர் சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தோளில் கலப்பை சுமந்து காளை மாடுகளுடன் விவசாயத்தை முதன்மை படுத்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து விநாயகர் சிலை அமைக்கப்பட்டது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.