பதிவு செய்த நாள்
19
செப்
2015
02:09
ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவன ஊழியர் தனது வீட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 600 விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார். ஓசூர், ஏரித்தெரு சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த, தனியார் கம்பெனி ஊழியர் பிரதீப். இவர், தனது வீட்டில், 600 விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார். பிளாஸ்டிக், களிமண், மரம் என பல்வேறு வகைகளில் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, ஒரே இடத்தில் பார்க்கும் பொதுமக்கள் வியப்படைகின்றனர்.
இது குறித்து பிரதீப் கூறுகையில்,எனது குடும்பத்தினருடன், நான் செல்லும் இடத்தில் எல்லாம் வித்தியாசமான, மனதிற்கு பிடித்த விநாயகர் சிலைகள் இருந்தால் உடனடியாக வாங்கி விடுவேன். தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் கடந்த, 10 ஆண்டுகளாக நான் சேகரித்தது, என்றார்.