பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 10:09
புதுச்சேரி: ஜென்ம மூல நட்சத்திரத்தையொட்டி, பஞ்சவடீ ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில் அமைந்துள்ள 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில், நேற்று காலை 8.௦௦ மணிக்கு, ஜென்ம மூல நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பால், சந்தனம், பன்னீர், மஞ்சள் போன்ற மங்கள திரவியங்களால், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மற்றும் வெற்றிலை மாலைகள் சார்த்தப் பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் தலைவர் கோதரண்டராமன், செயலாளர் நரசிம்மன், நிர்வாக அதிகாரி சந்திரமனோகரன் ஆகியோர் செய்திருந்தனர்.