பதிவு செய்த நாள்
22
செப்
2015
10:09
திருப்பாச்சூர்: திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில், 4.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இங்கு தங்காதலி உடனுறை வாசீஸ்வரர் கோவில் உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த கோவிலின், கோபுரங்களில் செடிகள் வளர்ந்து, மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, தற்போது, 4.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோவிலின் கோபுரங்களை சீரமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதுகுறித்து, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலை, 4.30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன், அரசிடம் உத்தரவு பெற்று, கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.