பதிவு செய்த நாள்
22
செப்
2015
10:09
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 17ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ஐந்தாம் நாளான நேற்று, இந்து முன்னணி, விநாயகர் சதுார்த்தி பேரவை சார்பில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் துவங்கியது. திரைப்பட இயக்குனர் கஸ்துாரி ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினர். காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை வழியாக கடற்கரைக்கு ÷ மளதாளம் முழங்க ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன. பழைய நீதிமன்ற வளாகம் எதிரே, ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சி லைகளை கடலில் இறக்கப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன. 150 பெரிய விநாயகர் சிலைகளும், 2,500 சிறிய சிலைகள் கரைக்கப்பட்டன. சி லைகளை கடலில் சிரமின்றி கரைக்க ஏதுவாக கடற்கரை பகுதியில் மணல் கொட்டப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டில் சிலைகள் கடலில் கரைக்கும்போது மாலைகளும் கடலில் கலந்து மாசு ஏற்படுத்தியது. இந்தாண்டு, சிலைகளுக்கு அணிவித்திருந்த மாலைகளை தன்னார்வர்கள் பெற்றுக் கொண்டு, கடல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.