கடலுார்: புதுக்குப்பம் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் 24ம் தேதி புரட்டாசி திருவோண கருட சேவை நடக்கிறது. கடலுார், புதுக்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் நான்காமாண்டு பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி துவங்கியது. 20ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை 9:00 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. நாளை (23ம் தேதி) மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம், 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு புரட்டாசி திருவோண கருட சேவை, 25ம் தேதி மாலை 6:00 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், த்வஜா அவரோகணம், பூர்ணாகுதி நடக்கிறது. 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, 1008 சகஸ்ரநாம அர்ச்னை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.