புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் விநாயகர் குழு, ஹிந்து முன்னணி மற்றும் இளைஞர்கள் சார்பில், 17ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக 300க்கும் மேற்பட்ட போலீஸ் பலத்த பாதுகப்புடன் எடுத்து செல்லப்பட்டு, நேற்று முன்தினம் இரவு திருமணஞ்சேரி குளத்தில் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை, புதுக்கோட்டை ஏ.டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில், டி.எஸ்.பி.,கள் புதுக்கோட்டை பாலகுரு, ஆலங்குடி சொக்கநாதன், பொன்னமராவதி இளங்கோவன், உட்பட, 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.