பதிவு செய்த நாள்
23
செப்
2015
11:09
செங்கல்பட்டு: மலைவையாவூர்,வெங்கடேச பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, மலைவையாவூர் கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டு, புரட்டாசி பிரம்மோற்ச விழா, கடந்த 16ம் தேதி துவங்கி, கருடசேவை உற்சவம் நடைபெற்றது.நேற்று, காலை, 6:00 மணிக்கு, பிரசன்ன வெங்கடேசபெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.காலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேரில்எழுந்தருளினார். பக்தர்கள் நீண்டவரிசையில், வந்துசுவாமியை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து, தேரோட்டம் துவங்கியது, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துசென்றனர்.கோவில் அருகில் இருந்து, புறப்பட்டதேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று, காலை, 10:00 மணிக்கு, கோவிலைவந்தடைந்தது.விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர்வடிவேல்துரை, தக்கார் கேசவராஜன் மற்றும் கிராமவாசிகள்செய்திருந்தனர்.