ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, மழை வேண்டி மாரியம்மன் கோவிலில், பெண்கள் ஒப்பாரி வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில், பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இதன்படி, ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரே, மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி படையலிட்டு அதை பிரசாதமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில், இந்த கிராமத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.