Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் கல்யாணவெங்கடரமணசுவாமி ... தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் தேர்த்திருவிழா! தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை 18 படிகளில் புதிய பஞ்சலோக தகடுகள் பதிக்கும் பணி தொடக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை 18 படிகளில் புதிய பஞ்சலோக தகடுகள் பதிக்கும் பணி தொடக்கம்!

பதிவு செய்த நாள்

24 செப்
2015
10:09

சபரிமலை: சபரிமலை 18 படிகளில் புதிய பஞ்சலோக தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது. ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கும் போது புதுப்பொலிவு பெற்ற படிகளை பக்தர்கள் பார்க்க முடியும்.

சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுசேரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை என 18 மலை தேவதைகள் குடிகொள்ளும் படியாக கருதப்படுகிறது. விரதமிருந்து இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே இந்த படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறி செல்லும் படிகள் பழுதாகி விட்ட நிலையில் புதிதாக பஞ்சலோக தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் முடிந்த நிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கலசம் நிறைத்து அதை ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முன்புறம் தேவசம்அதிகாரிகளும், நன்கொடை தாரர் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியை முடிப்ப தாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வேலைகள் தொடங்கியது. ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த பஞ்சலோக தகடுகள் வெட்டி எடுத்து அப்புறப்படுத்திய பின்னர் புதிய தகடுகள் பொருத்தப்படும். மொத்தம் நான்கு டன் எடை கொண்ட பஞ்சலோக தகடுகள் பதிக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்கு முன்னர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பணிமுடிந்தால் பிரதிஷ்டை சடங்குகளுக்கு பின்னர் பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar