பழநி மெட்டீரியல் ரோப் கார் ஆறு மாதங்களுக்கு பின் இயக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2015 12:09
பழநி: பழநி மலைக்கோயில் மெட்டீரியல் ரோப்கார் பழுதாகி ஆறு மாதங்களுக்கு பின் நேற்று முதல் இயக்கப்பட்டது.பழநியில் பஞ்சாமிர்த டப்பாக்களை ஏற்றிச்செல்ல ரூ. ஒரு கோடியில் மெட்டீரியல் ரோப்கார் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மணிநேரத்தில் 1.5 டன் வரை பஞ்சாமிர்தம் கொண்டு செல்லலாம். மார்ச் 25ல் மேல்புற டவர் சேதம் அடைந்து கீழே விழுந்ததால் பெட்டிகள் மலையில் உருண்டன.ரோப்கார் பாதுகாப்பு குழுவினரின் பரிந்துரையின்படி மழை, காற்றில் சேதம் அடையாத வகையில் ரூ.3 லட்சத்தில் மேல்தளத்தில் புதிய டவர், கீழ்தள டவருக்கு புதிய அஸ்திவாரம் அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டம், சில நாட்களாக நடந்தது. பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு ரோப் கார் பாதுகாப்பு குழு அனுமதி வழங்கி உள்ளதால் நேற்று முதல் மெட்டீரியல் ரோப் கார் நேற்று முதல் இயக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின் பஞ்சாமிர்த டப்பாக்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றன. சிறப்பு பூஜையில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.