முருக்கேரி: முருக்கேரியில் உள்ள கோவில்களில் இருந்த உண் டியலை மர்ம நபர்கள் உடைத்து, திருடிச் சென்றுள்ளனர். முருக்கேரியில் நாகாத்தம்மன், வெங்கடாத்தம்மன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் அருகே மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை போட்டுள்ளனர். கோவிலில் இருந்த திரிசூலத்தை எடுத்து இரண்டு கோவிலில்களில் இருந்த உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.