சோழவந்தான் : சோழவந்தான் நைனார் ஜூம்மா தொழுகை பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.நகர் முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். தொழுகையை அஜ்ரத் நெகமத்துல்லா நடத்தினார். புனிதகுரான் பாடல் பாடப்பட்டது. மதர்ஸாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.