பதிவு செய்த நாள்
28
செப்
2015
11:09
ஆர்.கே.பேட்டை: பவுர்ணமியை ஒட்டி, கந்த துணி மாரியம்மன் கோவிலில், நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, மடுகூர் - அம்மனேரி சாலையில் உள்ளது கந்த துணி மாரியம்மன் மற்றும் கொள்ளாபுரியம்மன் கோவில். பவுர்ணமியை ஒட்டி நேற்று, இந்த கோவிலில் சிறப்பு உற்சவம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரமும், தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தலும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் உள்புறப்பாடு எழுந்தருளினார். இதேபோல், வெள்ளாத்துார் வெள்ளாத்துாரம்மன் கோவிலிலும், வங்கனுார் செவிண்டியம்மன் கோவிலிலும் பவுர்ணமியை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.