திருநள்ளார் கோவிலில் பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2015 12:09
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும்,வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
இதனால் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில்பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலையில் நளன் குளத்தில் நீராடிவிட்டு பல்லாயிரக்காணக்கான பக்தகர்கள் சனிபகவானை வழிப்பட்டனர். கோவில் நிர்வாகம் பக்தர்கள் சனிபகவானை தரிசிக்க 50 ரூபாய் கட்டணம் தரிசனம், தர்ம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், தர்ம தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களின் வரிசை கோவில் ராஜகோபுரம் வீதிவரை பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் திருநள்ளார் பேருந்து நிலையம்,தேனூர் சாலை,அத்திப்படுகை உள்ளிட்ட சாலைகளில் பல்வேறு பகுதியில் வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.திருநள்ளார் இன்ஸ்பெக்டர் பால் தலைமையில் சப்.இன்ஸ்பெக்டர் சண்முகம்,பெருமாள்,சுரேஷ் மற்றும் போலீசார் கோவில் சுற்றி சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாதுக்காப்பில் ஈடுப்பட்டனார்.