காரைக்கால்: காரைக்காலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி நித்ய கல்யாணபெருமாள் ஆணிரை கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பின், நித்ய கல்யாண பெருமாள் பசுவை காக்கும் ஆணிரை கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்ய கல்யாணபக்தஜன சபாவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.