Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்தம் தரும் அரச மர தரிசனம்! அனுமன் மட்டும் உசத்தியா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
03:09

ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த புலவர் ஒருவர் இருந்தார். பாடல்கள் இயற்றுவதில் வல்லவரான அவரை, மக்கள் போற்றிக் கொண்டாடினர். நாளடைவில் அவரது புகழ் வேற்று நாடுகளுக்கும் பரவியது. இதனால் அவர் மீது பொறாமை கொண்டான் அரசன். புலவரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து, கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்துவது அரசனது வழக்கமாயிற்று. ஆனால், புலவர் அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பொறுமையுடன் இருந்தார்.  புலவரது இந்தச் செய்கை, அரசனுக்கு மேலும் எரிச்சலுõட்டியது. எப்படியாவது அவரை கோபமூட்ட வேண்டும்! என்ற எண்ணம் கொண்ட அரசன், ஒரு நாள் அவரை அரண்மனைக்கு வரவழைத்தான்.

அவரிடம், புலவரே... எனக்கொரு சந்தேகம்! என்றான். புலவரும் புன்னகை மாறாத முகத்துடன், கேளுங்கள் மன்னா! என்றார். புலவரே... பொதுவாக இறைவன் ஒரு மனிதனுக்கு ஏதேனும் குறைகளை வைத்தால், அதை ஈடு செய்யும் பொருட்டு வேறு ஏதேனும் சிறப்புகளை அவனுக்கு அளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால், உங்களைக் குருடனாகப் படைத்த இறைவன், வேறு எந்த சிறப்புகளையும் உங்களுக்கு அளிக்கவில்லையே! இதுதான் என் நீண்ட நாளைய சந்தேகம். அப்படியானால் கடவுள் உங்களிடம் மட்டும் அருள் காட்டவில்லை என்றுதானே அர்த்தம்? அப்போதும் புலவர் ஏதும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அவரை மேலும் அவமானப்படுத்தும் விதமாக, மன்னன், புலவரே! உங்களது நிலைமை குறித்து என் மனதுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது! ஹும், என்ன செய்வது? ஆனாலும் கடவுளுக்கு உங்களிடம் ஓரவஞ்சனை அதிகம்தான்! என்றான்.

போலியான ஆதங்கத்துடன் பேசிய மன்னனை நிதானமாகக் கையமர்த்தினார் புலவர். பிறகு, மன்னா... பரம கருணாமூர்த்தியான அந்த இறைவன், என்மீது அருளை வாரி வாரி வழங்கியிருக்கிறானே தவிர, துளியேனும் ஓரவஞ்சனை காட்டவில்லை! என்றார் தெளிவாக. என்ன கூறுகிறீர்கள் புலவரே? - மன்னனின் குரலில் அதிர்ச்சி. உண்மைதான் மன்னா! என் மீது இறைவன் அருள் இருந்ததாலேதான் நான் குருடனாகப் பிறந்தேன்! புலவரே... உமக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? அந்த இறைவனுக்கு உண்மையிலேயே உம்மீது அருள் இருந்திருந்தால், கண்டிப்பாக உம்மைக் குருடனாகப் படைத்திருக்க மாட்டார்!  மன்னனின் ஆணித்தரமான பேச்சுக்கு அமைதியாகப் பதிலளிக்கத் துவங்கினார் புலவர்.

மன்னா! நீங்கள் செய்யும் கொடுஞ் செயல்களைக் கண்களால் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை! ஆக, அப்படிப்பட்ட துன்பம் நேராமல் எனக்கு அருள் செய்தவன் அந்த இறைவன். நீங்கள் செய்யும் கொடுஞ் செயல்களைப் பிறர் சொல்லக் கேட்கும்போதே என் மனம் தாங்கொணா வேதனையுறுகிறது! அவற்றைக் கண்களால் வேறு காண்பதாக இருந்தால் என் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்? புலவரின் வார்த்தைகளைக் கேட்டு அவமானத்தில் தலை குனிந்தான் மன்னன். ஆணவத்தால் பிறரை இகழ்வது எவ்வளவு பெரிய இழிசெயல் என்பதை அந்தக் கணமே உணர்ந்து தெளிந்தான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar