பதிவு செய்த நாள்
29
செப்
2015
10:09
திருவள்ளூர்: ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும், வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவத்தில் பங்கேற்க, திருவள்ளூர் வீரராகவர் இன்று இரவு புறப்படுகிறார். ஸ்ரீபெரும்புதூர் வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம், கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில், கடைசி நாளான, நாளை (30ம் தேதி) திருவள்ளூர் வீரராகவர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுகிறார். இன்று, இரவு 10:00 மணிக்கு உற்சவர் வீரராகவர், கோவிலில் இருந்து, புறப்பட்டு, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுவார். அங்கு பூஜைகள், அபிஷேகம், வீதி புறப்பாடு முடித்து, அக்., 1ம் தேதி அதிகாலை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து, திருவள்ளூர் வீரராகவர் புறப்பட்டு, காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்திற்கு வந்து அடைவார். ÷ மற்கண்ட தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.