கோவையில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே உள்ளது. கோட்டைக்காடு நாகேஸ்வரர் கோயில் இறைவன் நாகேஸ்வரர்; இறைவி முத்து வாளியம்மன். இந்த அம்மன் சிலைக்கு பக்தர்கள் தாங்கள் விரும்பியது போல் காதணிகளையும் மூக்குத்திகளையும் போட்டுப் பார்க்க ஏதுவாக காதுகளிலும், இடது மூக்கிலும் துளைகள் உள்ளன. மேலும் அம்மனின் தலை முதல் பாதம் வரை பல பகுதிகளில் தட்டினால் ஒவ்வொரு ஸ்வரங்களாக ஒலி ஏற்படுகிறது. ஏழு ஸ்வரங்களும் தன்னுள் அடக்கம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த அம்மன் சிலை அமைந்துள்ளது சிறப்பு.