கேரளாவில் பாலக்காடு மலையில் தோன்றும் பாரதப்புழை என்ற நதியின் கரையில் உள்ளது. திருநாவாய் என்ற தலம். இது பல பெருமைகள் பெற்றது. திருமங்கை யாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற தலம். இங்கு உறையும் பெருமாள் நாவா முகுந்தன் என்றும் தாயார் மலர்மங்கை நாச்சியார் என்றும் திருநாமம் கொண்டுள்ளனர். இந்தச் சிலையை செதுக்கிய சிற்பி, தாயாரின் கண்ணைத் திறப்பதற்கு முன்பே சிலையில் உயிரோட்டம் இருக்கிறது. என்று உணர்ந்து அப்படியே விட்டு விட்டார். இன்றும் அச்சிலை கண் திறக்கப்படாமலேயே இருக்கிறது.