பதிவு செய்த நாள்
12
அக்
2015
11:10
பு.புளியம்பட்டி : புன்செய் புளியம்பட்டி, அவினாசி ரோட்டில், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு ,அன்னதானம் நடந்தது. இதனால்,கோவில் வளாகத்தை சுற்றிலும், பாக்கு மட்டை தட்டுகள், வாழை இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் சிதறி கிடந்தன. இவை காற்றில், பறந்து செல்வதால் சுகாதாரம் பாதித்தது.இதனால் குப்பையை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில், விவேகானந்தா சேவா கேந்த்ரா, புளியம்பட்டி மக்கள் நலச்சங்கம், டானா புதுார் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இணைந்து ஈடுபட்டனர். கோவிலின் உட்புறம், மண்டபம், சுற்றுப்புற பகுதிகளில், சுமார் 1 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டது.