புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிகார பாத யாத்திரை சென்றனர். புதுச்சேரியை இயற்கை சீற்றங்களிலிருந்து காக்க, வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு, பரிகார பாத யாத்திரை, துாய ஜென்ம ராக்கினி மாதா ஆலயத்தில் இருந்து, நேற்று முன் தினம் பிற்பகல் 2:30 மணிக்கு துவங்கியது. பேராலய பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் அடிகள் முன்னிலை வகித்தார். மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் அடிகள் துவக்கி வைத்தார். ரெட்டியார்பாளையம், மூலகுளம், அரும்பார்த்தபுரம், சுல்தான்பேட்டை வழியாக வில்லியனுார் மாதா கோவிலை சென்றடைந்தது. அங்கு துாத்துக்குடி மறை மாவட்ட ஆயர் யுவன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு பரிகார திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரிச்சர்ட், உதவி பங்குத் தந்தை சதீஷ் குமார், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர் கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.