பதிவு செய்த நாள்
14
அக்
2015
11:10
சபரிமலை: சபரிமலை நடை நாளை (அக்.,15) மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. அக்., 16- காலை 18 படிகளுக்கு பிரதிஷ்டை நடக்கிறது. அக்., 22- வரை நடை திறந்திருக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். புதிதாக ஐம்பொன் பதிக்கப்பட்ட 18 படிகளில் சுத்தி கலச பூஜையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்துவார். வேறு பூஜைகள் நடக்காது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அக்.,16 காலை 5 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடக்கும்.
பின், 18 படிகளுக்கு பிரதிஷ்டை, கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கும்.காலை 10 முதல் 10.30 -க்குள் பிரதிஷ்டை பூஜைகள், கும்பாபிஷேகத்தை தந்திரி நடத்துவார். அன்று இரவு 10மணிக்கு நடை அடைக்கப்படும். பின், ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்., 17 மாலை 5.30-க்கு நடை திறக்கும். அன்று பூஜைகள் கிடையாது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அக்., 18- காலை 5 மணிக்கு நடை திறந்து அபிஷேகத்துக்கு பின், நெய் அபிஷேகம் தொடங்கும். காலை 7.30-க்கு உஷபூஜை நடக்கும். தொடர்ந்து, கார்த்திகை ௧ல் இருந்து ஒரு ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு நடக்கும். அக்., 22 வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் படிபூஜை, சகஸ்ர கலசம், களபாபிஷேக பூஜைகள் நடக்கும். அக்., 22 இரவு 10மணிக்கு நடை அடைக்கப்படும்.