பதிவு செய்த நாள்
14
அக்
2015
11:10
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 12.10.15 முன்தினம் இரவு, மகாளய அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11:00 மணிக்கு, ஊஞ்சல் மண்டபத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபோது கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல், தாலாட்டு பாடல்களைப் பாடினர். இரவு 12: 30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன் செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர்கள் முனியப்பன், மணி மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.