பதிவு செய்த நாள்
14
அக்
2015
11:10
கோவை: கோவை ஈஷா யோக மையத்தில், நவராத்திரி கொண்டாட்டம் 13.10.15-ல் துவங்கியது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஈஷா யோக மையத்தில், ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நடப்பாண்டு, வரும் ஒன்பது நாட்களுக்கு விழா கொண்டாடப்பட உள்ளது.
முதல் மூன்று நாட்கள், குங்கும அலங்காரத்திலும், அடுத்த மூன்று நாட்கள், மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும், லிங்க பைரவி காட்சியளிக்க உள்ளார். முதல் நாளான நேற்று, லிங்க பைரவிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்துஸ்தானி குரலிசை கலைஞர்கள், பிரசாந்த் மற்றும் மஞ்சுநாத் ஆகியோரின் இசைக் கச்சேரி நடந்தது. பாரம்பரியமான கொலு கண்காட்சி, தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில், இசை கச்சேரி, பரதநாட்டியம் நடக்க உள்ளன.