குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2015 12:10
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 13.10.15 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
கர்நாடக மாநிலம் மைசூரு நடக்கும் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம், ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழா சிறப்பகாக நடக்கும். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து, காளி, மாரியம்மன், மாறு வேடங்கள் போட்டு, பொதுமக்களிடையே காணிக்கை வசூலித்து கோயிலில் கொண்டு சேர்ப்பார்கள்.
கொடியேற்றம்: திருவிழாவின் துவக்கமாக 13.10.15 அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதியுலா நடந்தது.6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பின் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.இரவு 9மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில், துர்க்கை கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். திருவிழா நாட்களில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது, தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் பல்வேறு கோலங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.