பதிவு செய்த நாள்
14
அக்
2015
01:10
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, சிறப்பு சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு, அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. பக்தி பாடல்களை பாடி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.