Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஞ்சிமேடு லட்சுமி நரசிம்மருக்கு ... கள்ளக்குறிச்சி கோவில்களில் நவராத்திரி கொலுக் கண்காட்சி! கள்ளக்குறிச்சி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி புதையலில் சிக்கிய ஆக்ரோஷ காளி அம்மன் சிலை : 17 ம் நூற்றாண்டை சேர்ந்தது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏர்வாடி புதையலில் சிக்கிய ஆக்ரோஷ காளி அம்மன் சிலை : 17 ம் நூற்றாண்டை சேர்ந்தது!

பதிவு செய்த நாள்

15 அக்
2015
11:10

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் புதைப்பொருளாக, 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த ஆக்ரோஷ காளி அம்மன் கற்சிலை கிடைத்துள்ளது.

இந்த சிலை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சில மாதங்களுக்கு முன் புதையலாக கிடைத்துள்ளது. இதனை வருவாய்த்துறையினர் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சிலையில் காளி அம்மன் முகம் ஆக்ரோஷமாக இருக்கிறது. தலையின் மேற்பகுதியில் கிரீடமாக எலும்புகூடு வடிவம், காலில் மகிஷாசுரனை வதம் செய்தபடியும் உள்ளது. நான்கு கைகள் உள்ளன. மேல் வலது கையில் பாம்பு, கீழ் கையில் உடுக்கை, மேல் இடது கையில் சூலாயுதம், கீழ் கையில் ரத்தம் பிடிக்கும் பாத்திரம் உள்ளன. கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. உயரம் ஒன்றரை அடி, நீளம் 10 அங்குலம், அகலம் 9 அங்குலம் உள்ளது.

காப்பாட்சியர் சவுந்திரபாண்டியன் கூறியதாவது: காளி சிலை 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. சிலையில் எந்தவித சேதமும் இல்லை. சிலையை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளோம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar