பதிவு செய்த நாள்
15
அக்
2015
11:10
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோவில்களில் நவராத்திரி விழா துவங்கியது. கள்ளக்குறிச்சி காந்தி சாலை சக்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா உற்சவம், நேற்று துவங்கியது.
தொடர்ந்து 8 நாட்கள் சிறப்பு அபிஷேகமும், மாலை நவராத்திரி கொலுக் கண்காட்சி வைக்கப்படுகிறது. தொடர்ந்து 9ம் நாள் சரஸ்வதி பூஜை தினத்தில் சுவாமிக்கு, சிறப்பு அலங்கார திருமஞ்சனம் செய்து, அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பத்தாம் நாள் விஜயதசமி தினத்தில் புதிதாக தொழில் துவங்குவோருக்கு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அதேபோல் கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவில், கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா உற்சவம், நேற்று துவங்கியது.