சங்கராபுரம்: சங்கராபுரம் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவிலில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முனியப்ப செட்டியார் செய்திருந்தார்.