பதிவு செய்த நாள்
15
அக்
2015
12:10
மணலி: 15 வார்டு பழைய நாப்பாளையத்தில், பழமையான பெருமாள் கோவில் உள்ளது. பராமரிப்பில்லாமல், கோவிலை சுற்றி, செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. கோவில் மீது பெரிய மரம் வளர்ந்து உள்ளது. இதனால், கோவில் சுவர் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. கோவிலை சீரமைக்க கோரி, பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கோவிலை சீரமைக்க, அறநிலைய துறை அதிகாரிகள் முன் வர வேண்டும். டி.நாகராஜ், பழைய நாப்பாளையம், மணலி புதுநகர்.