பதிவு செய்த நாள்
15
அக்
2015
12:10
ஆர்.டி., நகர்: ஆர்.டி., நகர், எச்.எம்.டி., லே-அவுட் புனித யூதா ததேயுஸ் திருத்தல பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இன்று மாலை, 6:00 மணிக்கு புனித கொடியை, குழந்தை இயேசு திருத்தலம் மற்றும் ஆலய ரெக்டரும், பங்கு தந்தையுமான உதயகுமார் ஏற்றுகிறார்.
இன்று முதல், 17ம் தேதி வரை, கன்னடத்தில் நவநாள் வழிபாடும், 22 - 24ம் தேதி வரை, ஆங்கிலத்தில் நவநாள் வழிபாடும் நடக்கிறது. 18ம் தேதி காலை, முதியோர் தினத்தையொட்டி ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலியும், 19 - 21ம் தேதி வரை, தினமும் மாலை, ஜெபமாலை,
திவ்யப்பலிபூஜை, மறையுரை நடக்கிறது. பெருவிழா நாளான, 25ம் தேதி, காலை முதல் மாலை வரை, ஆங்கிலம், கன்னடம், தமிழில், நோயாளிகளுக்கான திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
ஆடம்பர தேர்பவனியை தொடர்ந்து, நற்கருணை ஆசிர்வாதம், பின் கொடியிறக்கம் நடக்கிறது என, ஆலய பங்கு தந்தை காணிக்கராஜ் தெரிவித்தார்.