கேரளாவில் சாஸ்திரப்படி பக்தர்கள் விநாயகர் கோயிலை ஒரு முறையும், சூரியனை இரண்டு முறையும், சிவாலயத்தில் மூன்று முறையும், விஷ்ணு கோயிலில் நான்கு முறையும், முருகனை ஐந்து முறையும், பகவதி (அம்மன்) கோயிலில் ஐந்து முறையும் வலம் வருவார்கள். ஐயப்பன் மற்றும் சாஸ்தா கோயில்களில் நான்கு முறை வலம் வர வேண்டும் என்பது சாஸ்திரம். சபரிமலையில் கூட்ட நேரத்தில் இது சாத்தியமில்லை. ஆனால் மாதபூஜைக்கு சபரிமலை மற்று சாஸ்தா கோயில்களுக்கு செல்பவர்கள் இதைக் கடைபிடிக்கலாம்.