கடவுளை நமது நண்பன் போல பாவித்து வணங்க வேண்டும். பாரதியார் கண்ணனை காதலியாக கருதி வழிபட்டார். காஞ்சனாமாலை மீனாட்சியை குழந்தையாக கருதி வழிபட்டாள். இது போல ஏதாவது ஒரு உறவை உருவகப்படுத்தி கடவுளை வணங்குவதே சிறப்பாக அமையும். இறைவனை வணங்க ஒன்பது வழிகள் உள்ளன. கடவுளின் புகழை காதால் கேட்பதை சிரவணம் என்பர். இறைவன் புகழ் பாடுவதை கீர்த்தனம் என்பர். கடவுளை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பதை ஸ்மரணம் என்பர். இறைவனுக்கு பூஜை செய்வதை பாதசேவனம் என்பர். தனியாக கடவுளை வணங்குவதற்கு அர்ச்சம் எனப்பெயர். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதற்கு வந்தனம் என்றும், பகவானுக்கு தொண்டு செய்வதை தாஸ்யம் கொள்வதை சாக்யம் என்றும், இறைவனைத்தவிர வேறு எதையும் எண்ணாமல் இருப்பதை ஆத்மநிவேதனம் என்று சொல்வர்.