பதிவு செய்த நாள்
25
ஜூலை
2011
05:07
பூஜை நடக்கும் இடங்கள், சங்கு நாதம் கேட்கும் இடம், சிவநாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில் லட்சுமி வாசம் செய்கிறாள். அழகிய அடக்கமான பெண்கள். கணவனுக்கு கட்டுப்பட்ட மனைவி, மனைவியை காப்பாற்றும் கணவன், தானிய வகை, இரக்க குணம் கொண்டவர்கள், சுறுசுறுப்பாக இருப்பவர்கள், அகங்காரம் இல்லாதவர்கள், சாப்பிடும் போது ஈரக் காலுடன் அமர்பவர்கள், படுக்க செல்லும் போது உலர்ந்த காலுடன் படுப்பவர்கள், தூய்மையான வெள்ளை ஆடை அணிபவர்கள், துணிவு மிக்க பெண்கள் ஆகியோரிடம் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.