திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில், நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மாலை 7:00 மணிக்கு பள்ளி மாணவர்களின் பஜனை பாடல்கள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ராகவேந்திரா பஜனை குழுவினர், நவராத்திரி பாடல்களை பாடினர். கோவில் அர்ச்சகர், கொலு கண்காட்சிக்கு ஆராதனை செய்தார். கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.