பதிவு செய்த நாள்
19
அக்
2015
10:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற துலாமாத பிறப்பு தீர்த்தவாரியில் திரளான பக்தர் கள் புனித நீராடினர்.
கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச் சுமைகள் நீங்க வழி செய்யுமாறு சிவபெரு மானிடம் வேண்டிய போது ஐப்பசிமாதம் முழுவதும் நாகை மாவட்டம் மயிலாடு துறை காவிரி நதியில் நீராடினால் பாவங்கள்குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியி ல் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.அத னால் காசி க்குஇணையான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.இத்தகைய பெருமை வாய்ந்த து லா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப் பசிமாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அ தே போல் நேற்று ஐப்பசி(துலா) மாதம் பிறப்பை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம் வளர்த்த நாயகி சமே த அய்யாறப்பர் சுவாமி மற்றும் துலாக்கட்ட காசிவிசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆகியோர் சிறப்பு அல ங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தின் இரு கரைகளிலும் எழுந்தரு ளினர்.அதனைதொடர்ந்து திருவாவடு துறை ஆதின கட்டளை விசாரணை அம்பலவான சுவாமி காவிரிக் கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற து. பூஜையை கல்யாண குருக்கள் தலைமையிலா னோர் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் க லந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினர்.துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக நவம்பர் 11ம்தேதி அம்மாவாசை தீர்த்தம்,மயிலம்மை பூஜை,சகோபுர தரிசனம், 13ம் தேதி திருக்கல்யாணம், 15ம் தேதி திரு த்தேர், 16ம் தேதி கடமுகதீர்த்தவாரி,17ம் தேதி முடவன் முழுக்கும் நடைபெற உள்ளன.