தேவகோட்டை: ஐப்பசி முதல் நாளை முன்னிட்டு தேவகோட்டை மணிமுத்தாறில் சுவாமிகள் தீர்த்தவாரி கொடுத்தனர். ஐப்பசி முதல்நாள், தேவகோட்டையில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், கோதண்டராமர் கோயில், ரங்கநாதர் பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில், இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் கோயில், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில்களிலிருந்து உற்சவர்கள் தேவகோட்டை எல்லையில் உள்ள மணிமுத்தாறுக்கு எழுந்தருளினர். அங்கிருந்து சுவாமிகளின் அங்குசத்தேவர், அட்சரத்தேவர், மற்றும் பெருமாள்களுக்குரிய சக்கரதாழ்வார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.