பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்து இருக்கிறது. பாலைப் பெற முயல்கின்ற ஒருவன் அதன் கொம்புகளையோ, காதுகளையோ வருடினால் பால் கிடைக்குமா? பால் பெற விரும்புவன் பசுவின் மடியை வருடிப் பாலை பெற வேண்டும். அதே போல் இறைவன் திருவடிமுன் நின்று வழிபட்டுத் திருவருளைப் பெறுதல் வேண்டும்.