திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டால் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையில் புயல் போன்ற துன்பங்கள் வந்தாலும் தீப தரிசனம் செய்தால் அவை எளிதில் நீங்கி விடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.