மூன்றாம் பிறையைப் பார்ப்பதால் ஆயுள் அதிகரிக்கும். கிரக ரீதியாக ஏற்படும் தோஷம், கண்டம், நோய் நீங்கும். ஒருவர் மூன்று வயது முதல் எண்பது வயது வரை தொடர்ந்து மூன்றாம் பிறைகளை சந்தித்தால், உத்தேசமாக ஆயிரம் முறை பார்த்து விடலாம். அப்போது, சதாபிஷேகம் என்னும் நூறாவது கல்யாணம் செய்து கொள்வார்கள். தம்பதியாக இல்லாவிட்டாலும் கூட ஆயுஷ்ய ஹோமம் செய்து கொள்வதுண்டு. இவர்களையே ஆயிரம் பிறைகண்ட அண்ணல் எனப் போற்றுகிறது சாஸ்திரம்.