கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இன்று பரிவேட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2015 11:10
நாகர்கோவில்: நவராத்திரி விழாவின் நிறைவாக கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை நடத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அன்னதானம், வாகனபவனி ஆகியவை நடக்கிறது.10-ம் நாள் விழாவான இன்று பரிவேட்டை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 முதல் 11.30-க்குள் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் ஒரு மணிக்கு யானை, குதிரைகள் அணி வகுக்க, மேளதாளம் முழங்க தேவி பஞ்சலிங்கபுரத்தில் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு பரிவேட்டை நடைபெறும்.