தமிழகத்தில் விநாயகரக்கு மோதகம் என்ற கொழுக்கட்டையை பிரசாதமாகப் படைத்து வழிபடுகிறோம். ஆனால் கேரளாவில், கொட்டக்கரை சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள மணிகண்டேஸ்வரம் ஆலயத்தில் உன்னி அப்பம் என்னும் அப்பமே விநாயகருக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. அதுவும் விநாயகர் முன்னிலையிலேயே சுடச்சுடத் தயாரிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படுவது தனிச் சிறப்பாகும்.